பக்கங்கள்

Tuesday, July 2, 2013

முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை:விசாரணை கண் துடைப்பு – கிலானி!


news27920083-100046-1347770270-853492963ஸ்ரீநகர்:கஷ்மீர் மாநிலம் பந்திப் போரா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவம் நடத்திய அநியாய துப்பாக்கிச்சூட்டில் 2 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வெறும் கண் துடைப்பு என்று தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

அதே வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டது குறித்து, திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இதுபோன்ற சம்பவங்கள் கஷ்மீர் மக்களுக்கும், நாட்டின் மற்றப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் இடையே உணர்ச்சிகரமான முறையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment