டெல் அவீவ்:அணு ஆயுதத்தை தயாரிக்க முயலும் ஈரான், தனது லட்சியத்தை அடையும் முன்பே தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். சில வேளை அமெரிக்கா தாக்கும் முன்பே நாங்கள் ஈரானை தாக்குவோம் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும் நெதன்யாகு கூறியது: ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. அணு குண்டை ஈரான் கைவசப்படுத்துவதை அனுமதிக்கமாட்டோம். ஈரானின் காய் நகர்த்தல்களை அமெரிக்காவை விட நாங்கள் அதிகமாக கண்காணித்துவருகிறோம். காரணம், அமெரிக்காவை விட ஈரானுக்கு அருகில் இருப்பது இஸ்ரேலாகும் ஈரானில் அதிபர் மாறியதால் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் இருந்து வாபஸ் பெறாது. அஹ்மத் நஜாத் சிரித்துக்கொண்டே அணுகுண்டை தயாரிக்கிறார் என்று நெதன்யாகு குற்றம் சாட்டுகிறார்.
No comments:
Post a Comment