சென்னை : டெல்லி பல்கலைக்கழகம் புதிதாகக் கொண்டு வந்துள்ள FYUP என்ற நான்கு வருட இளங்கலை பட்ட மேற்படிப்பு பாடத்திட்டம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நான்கு வருடம் படிக்கக்கூடிய மாணவர்கள் விரும்பினால் இரண்டு வருடத்தில்இடை நிறுத்தம் செய்து கொள்ளலாம், இம்மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும் என்ற குறிப்பிட்ட சில வரம்புகள் மூலம் இப்பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கிராமப்பற மாணவர்களும், அடித்தட்டு மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பாடத்திட்டத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இப்பாடத்திட்டத்திற்கு DSU, SIO, AISA போன்ற மாணவ இயக்கங்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேம்பஸ் ஃப்ரண்ட் FYUPக்கு எதிராக இந்தியா முழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் தமிழ் மாநிலக் குழு தமிழகத்தின் பிரபலமான ஐந்து பல்கலைக்கழகங்களில் நாளை (21-06-2013) வாயிற்முனை கூட்டங்களின் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக மாணவர்களின் கண்டனத்தையும் பதிவு செய்ய உள்ளது .
பல்கலைக்கழகங்களின் விவரம் வருமாறு:
பல்கலைக்கழகங்களின் விவரம் வருமாறு:
1. சென்னை பல்கலைக்கழகம்
2. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
3. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
4. மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை
5. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
No comments:
Post a Comment