பக்கங்கள்

Tuesday, June 18, 2013

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு: ஐ.பி இயக்குநரிடம் இன்று விசாரணை!


ishrat-jahan-fake-encounter-case-cbi-says-strong-evidence-to-nail-ib-special-director-rajendra-kumarபுதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் குஜராத் போலீசால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இண்டலிஜன்ஸ் பீரோ சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமாரிடம் சி.பி.ஐ இன்று விசாரணை நடத்த உள்ளது.
ராஜேந்திரகுமாருக்கு போலி என்கவுண்டரில் உள்ள பங்கு குறித்து சி.பி.ஐ க்கு ஆதாரங்கள் கிடைத்தன.
இதன் அடிப்படையில் ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், தனக்கு கிடைத்த தகவல் சரியானது என்றும் ஆனால் போலி என்கவுண்டரில் தனக்கு பங்கில்லை என்றும் ராஜேந்திரகுமார் விசாரணையின்போது தெரிவித்திருந்தார். ஆனால், இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சதித்திட்டத்தில் ராஜேந்திரகுமாரின் பங்கு குறித்த தெளிவான ஆதாரம் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு மீண்டும் ராஜேந்திரகுமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.பி மேலதிகாரியை விசாரணைக்கு அழைத்தது மூலம் சி.பி.ஐ மற்றும் ஐ.பி இடையே மோதலை உருவாக்கியது. உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இரு ஏஜன்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

No comments:

Post a Comment