கொழும்பு:இலங்கையின் தெற்கே, களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் புத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா சிலைக்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலர் அங்கிருந்து பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளனர்.அந்த சம்பவத்துக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்தப் பிரதேசத்தில்
நிலவிய பெரும் பதட்டம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் சந்திரவட்டக்கல்லை அகற்றியவர்கள் தேவாலய நிர்வாகத்திடம் மன்னிப்புகோரிய பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றதாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார். ‘சந்திரவட்டக்கல் என்பது அரசர்கள் காலத்திலிருந்து இருந்துவருகின்ற நாட்டின் பாரம்பரிய கலை வடிவம். அது புத்த மததுக்கு மட்டும் உரியது அல்ல. அது இந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் உரிய எங்களின் பாரம்பரிய உரிமை. அதனை அகற்றிச் சென்றுவிட்டது மட்டுமன்றி அங்கிருந்த கத்தோலிக்க மதகுருமாரையும் அவர்கள் கேவலகமாக பேசியிருந்தார்கள். அதற்கு எதிராகத்தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்’ என்றார் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர்.
சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா சாமியார்கள் போலீசாருடன் தான் இருந்தார்கள். போலீசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்’ என்றும் அவர் கூறினார்.
சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா சாமியார்கள் போலீசாருடன் தான் இருந்தார்கள். போலீசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்’ என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment