பக்கங்கள்

Tuesday, June 18, 2013

இஷ்ரத் ஜஹான் போலிஎன்கவுண்டர் வழக்கு: ஐ.பி அதிகாரியை காப்பாற்றும் முயற்சியை நிறுத்த எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேரை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த ஐ.பி அதிகாரியை காப்பாற்றும் முயற்சியை நிறுத்தவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதை சி.பி.ஐ இயக்குநரே தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால், தங்களுடைய தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கை என்று கூறி ராஜேந்தர் குமாரை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஐ.பி ஈடுபட்டுள்ளது.
ஐ.பி அதிகாரியை காப்பாற்ற உள்துறை செயலாளர் ஐ.பி, சி.பி.ஐ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராஜேந்தர் குமாரை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க ஐ.பி தலைவர் பிரதமரைக் கூட சந்தித்துள்ளார்.
முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பல்வேறு வழக்குகளிலும், போலி என்கவுண்டர்களிலும் ஐ.பிக்கு பங்கிருப்பது நிரூபணமாகிவருகிறது.தன்னம்பிக்கை சீர்குலைந்துவிடும் என்று கூறி வழக்கு விசாரணையில் இருந்து ஐ.பி பலவேளைகளிலும் தப்பித்து வருகிறது.
பிரதமரிடமிருந்து ஆதரவான கருத்து கிடைக்காதபோது ஹெட்லைன்ஸ் டுடே என்ற 24 மணிநேர நியூஸ் சானலை பயன்படுத்தி ராஜேந்தர் குமாரின் நடவடிக்கையை நியாயப்படுத்த ஐ.பி முனைந்தது. நரேந்திரமோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் தொலைபேசி மூலமாக சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி ஒரு ஆடியோ ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இந்த உரையாடலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஐ.பிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை பல்வேறு அரசுகள் தீவிரவாதத்திற்கு எதிரான வேட்டை என்ற திரைமறைவில் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் நிரபராதிகள் என்பதை உறுதிப் படுத்தும் ஆதாரங்களை சில ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யாமல் முஸ்லிம் இளைஞர்களின் விடுதலையை அரசுகள் கால தாமதம் செய்கின்றன. இவ்வாறு எ.ஸயீத் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment