கெய்ரோ:எகிப்தில் இஸ்லாமிய சிந்தனைவாதியும், சீர்திருத்தவாதியுமான இமாம் ஹஸனுல் பன்னா அவர்களால் துவக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பல்வேறு சித்திரவதைகளுக்கும், ஆட்சியாளர்களின் கொடுமைகளுக்கும் மத்தியில் நிலைகுலையாமல் தனது பணிகளை ஆற்றி வந்தது. இந்நிலையில் துனீசியாவில் உருவான அரபுலக எழுச்சியின் வசந்தம் எகிப்தையும் தழுவியது. ஜனநாயகம், சுதந்திரம் கோரி சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக
ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை திருத்தி வழி நடத்த தயார். அரசியல் சாசனத்தில் திருத்தம் கோரும் கோரிக்கைகள் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான நடவடிக்கைகள் கால தாமதமின்றி எடுக்கப்படும். அதேவேளையில் நாட்டை சீர்குலைக்கவும், அரசை கவிழ்க்கவும் சதித்திட்டம் தீட்டுவோரை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம்.’ இவ்வாறு முர்ஸி தனது உரையில் கூறினார்.
இரண்டு மணிநேரம் நீண்ட முர்ஸியின் உரையை நாட்டின் முக்கிய தொலைக்காட்சி சானல்கள் நேரடியாக ஒளிபரப்பின.
அதேவேளையில், வடக்கு நகரமான மன்சூராவில் முர்ஸியின் ஆதரவாளர்களும், எதிர்கட்சியினரு மோதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர். 170 பேருக்கு காயம் ஏற்பட்டது. முர்ஸியை ஆட்சியில் இருந்து விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என்று எதிர்கட்சியினர் அறிவித்துள்ளனர். மோதல் சூழலை கவனத்தில் கொண்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி முர்ஸி எகிப்தின் முதன் முதலாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக பதவியேற்றார்.அவரது ஆட்சியை பல முறை கவிழ்க்க சூழ்ச்சிகள் நடந்துள்ளன.தொடர்ந்து நடக்கும் கலவரங்களும், போராட்டங்களும் ஏற்கனவே தகர்ந்துபோன எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேலும் சீரழித்துள்ளன.
No comments:
Post a Comment