பக்கங்கள்

Thursday, June 27, 2013

தாலிபானுடன் பேச்சுவார்த்தை தொடரும்:ஒபாமா,கர்ஸாய் கூட்டாக அறிவிப்பு!

காபூல்:அதிபர் மாளிகையின் அருகில் தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தினாலும் அவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்று அமெரிக்க அதிபர்பாரக் ஒபாமாவும், ஆப்கான் அதிபர் ஹாமித் கர்ஸாயும் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு இருவரும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டனர்.
ஆப்கான் உயர்மட்ட அமைதிக்குழுவுக்கும், தாலிபானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் கத்தர் தலைநகர் தோஹாவில் திறந்துள்ள அலுவலகத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் அளிப்போம் என்று இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
கத்தர் தாலிபான் அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த கொடி மற்றும் பெயரை அங்கீகரிக்கமாட்டோம் என்று கூறி கர்ஸாய், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாட்டோம் என்று முன்னர் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment