பக்கங்கள்

Sunday, June 23, 2013

பொது பல சேனாவுக்கு அரசு ஆதரவு?

முஸ்லிம்களின் ஹலால் உணவு சான்றிதழுக்கு எதிராக இலங்கையில் கடும்போக்கு பௌத்தர்களால் நடத்தப்பட்ட போராட்டமொன்றை இலங்கையில் பொது பல சேனா அமைப்பு தொடர்ச்சையாக பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாகி வருகிறது.
முஸ்லிம்களின் ஹலால் உணவு சான்றிதழ் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் நாட்டில் மாட்டிறைச்சி வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் நடந்தபோராட்டங்களின்போதும்,
இன்னும் முஸ்லிம்களை நேரடியாகப் பாதிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் பொது பல சேனா தீவிரவாத அமைப்பினர் தொடர்பாகஊடகங்களில்  விமர்சனங்கள் எழுந்தன.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான துணிக்கடை ஒன்று கொழும்பில் தாக்கப்பட்ட சம்பவத்தின்போதும் பொது பல சேனா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தம்மீதானகுற்றச்சாட்டுக்களை அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அப்போது மறுத்து கருத்துக் கூறியிருந்தார். இதேபோல, அண்மைக்காலமாக கிறிஸ்தவ அமைப்புகள் மீதும் கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் பொது பல சேனா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2008-ம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தலாஹேனவில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ வழிபாட்டிடம் ஒன்றில் வைத்து பொது பல சேனாவின் செயலாளர்ஞானசார தேரர் கிறிஸ்தவ போதகரை காலால் உதைத்து வழிபாட்டிடத்தை தாக்கியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்புக்கு அரசின் உயர் பீடத்தின் ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. அந்த அமைப்பின் பயிற்சிக்கூடமொன்றை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே முன்னின்று திறந்துவைத்திருந்தார். அது, அந்த அமைப்பை மேலும் ஊக்குவிக்கும் செயல் என்று நாட்டின்நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் அப்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை புத்தர்களுக்கே சொந்தம் என்று பொது பல சேனா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு அகில இலங்கை இந்து மாமன்றமும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment