Saturday, June 8, 2013

மோடி பலூன் விரைவில் வெடித்துவிடும் – சரத்பவார்!


Agriculture Minister Sharad Pawar
புதுடெல்லி:அளவுக்கு மீறி காற்றடிக்கப்பட்டு வரும் “மோடி’ என்ற பலூன் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெடித்துவிடும் என குஜராத் முதல்வர் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்  நரேந்திர மோடி குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது, அவரை பிரதானப்படுத்தி தேர்தலைச்சந்திப்பது உள்ளிட்ட
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சரத் பவார் அளித்த பதில்:நரேந்திர மோடிக்கு பாஜகவில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். என்னுடைய ஐம்பது ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற பலரைச் சந்தித்துள்ளேன். மிகைப்படுத்தப்படும் எந்த ஒரு விஷயமும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு பலூனில் தேவையான அளவுக்குத்தான் காற்றடிக்க வேண்டும். அளவுக்கு மீறி காற்றடித்தால் அழுத்தம் தாங்காமல் அது வெடித்துவிடும். அது போலத்தான் பாஜகவில் மிகைப்படுத்தப்பட்டு வரும் “மோடி’ என்ற பலூனும் விரைவில் வெடித்துவிடும் என்று சரத் பவார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment