Tuesday, June 25, 2013

காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதல்!

காஸ்ஸா:காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தாருல் பலா, கான் யூனுஸ், ரஃபா ஆகிய இடங்களில் ஏழு ஏவுகணைகள் தாக்கியதாக ஃபலஸ்தீன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளில் ஒன்று ஃபலஸ்தீன் போராளி இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாதின் அலுவலகத்தை தாக்கியது. காஸ்ஸாவிற்கு சரக்குகளை கொண்டு செல்லும் ஒரே வழியான கரீம் அபூஸலீம் வாசலை இஸ்ரேல் மூடியுள்ளது.
அதேவேளையில்,
நேற்று முன் தினம் ஃபலஸ்தீனில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.காஸ்ஸாவில் இருந்து இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி தாக்க வந்தபோது அவற்றை வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

No comments:

Post a Comment