பக்கங்கள்

Sunday, June 16, 2013

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை கொலைச் செய்வதற்கு முன்பு கடத்திச் சென்று சிறை வைத்த ஐ.பி – அதிர்ச்சி தகவல்!

M_Id_384394_Ishrat_Jahan
புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த சம்பவத்தில் ஐ.பிக்கு தீவிர பங்கிருப்பது குறித்த கூடுதல் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.
மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 முஸ்லிம் இளைஞர்கள் லஷ்கர்- இ – தய்யிபா போராளி இயக்கத்தைச் சார்ந்தவர்கள்
என்றும், அவர்கள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு பழிவாங்க நரேந்திரமோடியை கொல்ல வந்தார்கள் என்ற பொய்யான தகவலை இண்டலிஜன்ஸ் பீரோவின் தற்போதைய சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமார் குஜராத் போலீசுக்கு தகவல் அளித்தார்.இத்தோடு ஐ.பி  சிறப்பு இயக்குநர் சதி நின்றுவிடவில்லை.இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல போடப்பட்ட சதித்திட்டத்திலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் ராஜேந்தர் குமார் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள குஜராத் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை கடத்தி வந்து 3 நாட்கள் ரகசிய இடத்தில் ஐ.பி வைத்துள்ளது.2004 ஜூன் 14-ஆம் தேதி ஐ.பி, இவர்களை குஜராத் போலீசிடம் ஒப்படைத்துள்ளது.குஜராத் போலீஸ் நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற பிறகு லஷ்கர்-இ-தய்யிபா போராளிகளை சுட்டுக்கொன்றதாக மறு நாள் செய்திவெளியானது.வல்ஸத் டோல் ப்ளாஸாவில் வைத்து ஐ.பி, இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரை குஜராத் போலீசிடம் ஒப்படைத்ததாக கைதுச் செய்யப்பட்டுள்ள குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நான்குபேரிடமிருந்து கைப்பற்றியதாக கூறப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியும், இதர ஆயுதங்களையும் வழங்கியவர் ராஜேந்திர குமார் ஆவார்.சம்பவம் நிகழ்ந்த தினத்தில் ராஜேந்திர குமார், குஜராத்  முதல்வரின் அலுவலகத்திற்கு 37 தடவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.இதற்கான ஆதாரங்களும் சி.பி.ஐ வசம் உள்ளன.போலி என்கவுண்டரை நடத்திய குஜராத் க்ரைம் ப்ராஞ்சுடன், ராஜேந்திர குமார் போனில் தொடர்பு கொண்ட விபரங்களையும் சி.பி.ஐ ஆதாரமாக தாக்கல் செய்யும்.ஏற்கனவே கைதுச் செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், போலி என்கவுண்டரில் தொடர்புடையவருமான ஜி.எல்.சிங்கால் இந்த விபரங்களை சி.பி.ஐயிடம் தெரிவித்துள்ளார்.மாஜிஸ்ட்ரேட் முன்பாக சி.ஆர்.பி.சி 164-வது பிரிவின் படி சிங்காலின் வாக்குமூலத்தை சி.பி.ஐ பதிவுச் செய்து ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளது.போலி என்கவுண்டர் படுகொலையில் பங்கேற்ற இதர சில போலீஸ் அதிகாரிகளின் வாக்குமூலங்களும் ஐ.பி அதிகாரி ராஜேந்திரகுமாருக்கு எதிராக உள்ளன.ராஜேந்திர குமாருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர குமார் கைதாகலாம் என்பது உறுதியானவுடன், அவரைக் காப்பாற்ற ஐ.பி, உயர்மட்ட தரப்பில் தலையிட்டு, சி.பி.ஐக்கு உதவிய விசாரணை அதிகாரி சதீஷ் வர்மா ஐ.பி.எஸ்ஸை புலனாய்வுக்குழுவில் இருந்து நீக்க வைத்துள்ளது.சதீஷ் வர்மா எதற்காக நீக்கப்பட்டார்? என்பதை சி.பி.ஐ இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.
நரேந்திர மோடியின் பிரதமர் கனவுக்கான ஓட்டத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தடைக்கல்லாக மாறிவிடுமோ? என்ற அச்சம் பா.ஜ.கவை பீடித்துள்ளது

No comments:

Post a Comment