பக்கங்கள்

Friday, June 28, 2013

ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் படுகொலையில் ஐ.பியின் பங்கினை விசாரிக்கிறது சி.பி.ஐ!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் ஐ.பியின் பங்கினை வெளிக்கொணர்ந்ததை தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு நடந்த ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் படுகொலை வழக்கிலும் ஐ.பியின் தலையீட்டைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. குஜராத்தில் ஐ.பி பொறுப்பை வகித்த தற்போதைய இண்டலிஜன்ஸ் பீரோ சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மற்றும் ஐ.பி அதிகாரிகளுக்கு ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் படுகொலை வழக்கில் தொடர்பிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.இது தொடர்பாக இரண்டு ஐ.பி அதிகாரிகளை சி.பி.ஐ விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பங்கினைக் குறித்து விசாரிக்க கோரி கொல்லப்பட்ட ஸாதிக் ஜமாலின் சகோதரர் ஷபீர் ஜமால் மேத்தர் கடந்த மே 29-ஆம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.இதற்கு ஆதரவான பதிலை சி.பி.ஐ நீதிமன்றத்தில் அளித்துள்ளதாக ஷபீரின் வழக்கறிஞர் ஷம்ஷாத் படான் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சார்ந்த அப்பாவியான ஸாதிக் ஜமால், கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நரோடாவில் வைத்து குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment