Thursday, June 27, 2013

தாங்கமுடியாத செலவு:அமெரிக்கா, ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது!

வாஷிங்டன்:அமெரிக்கா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. 2017-ஆம் ஆண்டில் 80 ஆயிரம் ராணுவ வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செலவை குறைப்பதன் ஒரு பகுதியாக 2-வது உலகப்போருக்கு பிறகு பெரிய அளவில் ராணுவ வீரர்களை குறைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
ராணுவ வீரர்களை குறைப்பதற்கான அமெரிக்க அரசின் திட்டம், பல்வேறு ராணுவ முகாம்களை பாதிக்கும் என்று  அமெரிக்காவின் ராணுவ தலைவர் ஜெனரல் ரேமண்ட்ஒடீர்ணோ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆசியா, பசிபிக் பகுதிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் கூறுகிறார்.மொத்தம் 12 பிரிகேடுகள் அமெரிக்காவிற்கு உள்ளன. அதில் ஜெர்மனியில் உள்ள 2 பிரிகேடுகளை அமெரிக்கா முற்றிலும் விலக்கிக் கொள்ளும்.

No comments:

Post a Comment