அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி பி.பி பாண்டேயின் மனுவில் வாதம் கேட்பதில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். தான் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி.வன்ஸாராவுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடியதால் இம்மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எஸ்.ஆர்.பிரம்மத் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் போலியானது அல்ல, கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தாம், ஆகையால்
தன் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்துச் செய்யக்கோரி பி.பி.பாண்டே உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் பி.பி.பாண்டே தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தவுடன், போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோபிநாத் பிள்ளை சார்பாக ஆஜரான வழக்குரைஞர் முகுல் சின்ஹா, எதிர்ப்பு தெரிவித்தார்.இஷ்ரத் வழக்கு, இதே நீதிமன்றத்தில் இன்னொரு பெஞ்ச் விசாரித்து வரும் வேளையில், அந்த பெஞ்சே இவ்வழக்கையும் விசாரிக்கவேண்டும் என்று வாதிட்டார்.சி.பி.ஐ நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வருகிற ஜூலை 4-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில் பாண்டேயின் மனுவை பரிசீலிக்க கூடாது என்று முகுல் சின்ஹா கூறினார்.அப்பொழுது நீதிபதி பிரம்மத், இவ்வழக்கை வேறொரு பெஞ்சுக்கு மாற்றும் பொறுப்பு நீதிமன்ற பதிவாளரிடம் இருப்பதாக கூறி, இவ்வழக்கில் தான் வாதம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment