அலிகர்: பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதும், எடிட்டரின்(பத்திரிகை முதன்மை ஆசிரியர்) பங்களிப்பும், சுதந்திரமும் குறைவதும் இந்தியாவில் ஊடகங்கள் சந்திக்கும் சவால்கள் என்று துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகையாளர்கள் தேசிய யூனியனின்
17-வது மாநாட்டில் உரையாற்றினார் அவர்.அப்பொழுது அவர் கூறியது: ஊடகங்கள் தொடர்பாக இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்கள் ஊடகங்களின் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வி எழுப்புகிறது.இத்துறையில் பெரும் கார்ப்பரேட்டுகளின் பங்களிப்பும், சந்தையில் ஆதிக்கமும் ஊடக சுதந்திரத்திற்கு சவாலை எழுப்புகிறது.
2009-ஆம் ஆண்டு அட்மினிஸ்ட்ரேடிவ் ஸ்டாஃப் காலேஜ் ஆஃப் இந்தியா தயாரித்த அறிக்கையின் படி நாட்டின் பிரபல 23 சானல்களில் 11 சானல்களுக்கு பத்திரிகையும், ரேடியோவும் உள்ளன.ஆனால், 300 ஒற்றையான செய்தி சானல்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.இவர்கள் கறுப்புப்பணம், போலி வெளிநாட்டு-உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரை சார்ந்துள்ளனர்.
ட்ராய் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தனியார் செய்தி சேனல்களுக்கு கட்டுப்பாடு இல்லாத உரிமையாளர் உரிமை, பணம் கொடுத்து செய்தி அளித்தல், வர்த்தக-அரசியல் லாபிகள் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக உறுதிச் செய்துள்ளது.இது தவறான ஆய்விற்கும், அத்தகைய செய்திகளை ஒளிபரப்புச் செய்வதற்கும் காரணமாகும்.அச்சு-மின்னணு ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியான ஊடக கமிட்டி உருவாக்கவேண்டும்.பிரபல நபர்கள் இந்த கமிட்டியில் உறுப்பினராக இருக்கவேண்டும்.ஆனால், ஊடக உரிமையாளர்களையும், அவர்கள் சார்ந்த நபர்களையும் இதில் உட்படுத்தக்கூடாது.இவ்வாறு ஹாமித் அன்ஸாரி கூறினார்.
No comments:
Post a Comment