வாஷிங்டன்:அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சியான(என்.எஸ்.ஏ) இதர நாடுகளில் உள்ள குடிமக்களின் அந்தரங்க விபரங்களை திருடுவதாக தகவலை வெளியிட்ட சி.ஐ.ஏவின் முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் எட்வர்ட் ஸ்நோடனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஸ்நோடனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுடன் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தொடர்பு கொண்டுள்ளது. ஸ்நோடன் அமெரிக்காவால் குற்றம் சுமத்தப்பட்ட நபர் என்றும் ஆகையால்
ரஷ்யா மற்றும் சீனா ஸ்நோடன் விவகாரத்தில் ஏன் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை என்று அமெரிக்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-சீனா இடையேயான நல்லுறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் ஸ்நோடனை சீனா ஒப்படைக்கும் என்று எதிர்பார்ப்பதாக எதிர்பாக்கிறோம். அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக ரஷ்யா கடைப்பிடிக்கும் நிலைப்பாடுகள் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை உருவாக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஸ்நோடன் மீது உளவு பார்த்த குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து அவர் கைதுச் செய்யப்பட வாய்ப்பிருந்ததால் ஹாங்காங்கில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அவர் சென்றார். அவர் மீது நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
ஸ்நோடனை தடுத்து வைக்கவோ, நாட்டில் இருந்து வெளியேற்றவோ சட்டம் அனுமதிக்கவில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா-அமெரிக்கா இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் எதுவும் இல்லை. நேற்று காலை 6 மணிக்கு ஸ்நோடன், கியூபாவின் தலைநகரான ஹவானாவுக்கு சென்றுள்ளதாக ரஷ்யன் நியூஸ் சர்வீஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் அரசியல் புகலிடம் கோரி ஸ்நோடன் விண்ணப்பித்துள்ளதாக ஈக்வடார் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்நோடனின் மனு கிடைத்துள்ளதாகவும், அவருக்கு புகலிடம் அளிப்பதுக் குறித்து முடிவு எடுக்கவில்லை என்றும் ஈக்வடார் வெளியுறவுத்துறமை அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ தெரிவித்துள்ளார். ஸ்நோடன் ஹவானாவில் இருந்து ஈக்வடார் நாட்டுக்குச் செல்வார் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment