Sunday, June 16, 2013

குண்டுவெடிப்புகள்:உ.பி போலீசின் பொய் பித்தலாட்டங்கள் அம்பலம்!

1361503920_hyd-explosion5
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது அநியாயமாக சாட்டப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் குறித்து போலீஸின் சதித்திட்டத்தை தோலுரித்துக் காட்டிய பிரபல புலனாய்வு பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதானின் குலைல் நியூஸ்.காம், தற்போது உ.பி போலீசின் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அண்மையில் சிறையில் வைத்துக் கொல்லப்பட்ட லக்னோ-பைசாபாத் நீதிமன்றங்களுக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹித் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்பதை தெளிவுப்படுத்தும் புலனாய்வு ஏஜன்சிகளின் ஆவணங்களை நீதிமன்றங்களில் இருந்து தந்திரமாக பெற்று ஆதாரங்களுடன் குலைல் நியூஸ் வெளியிட்டுள்ளது. பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியரான காலித் முஜாஹித் போலீஸ் காவலில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்தார். 2005 ஜூலை  28-ஆம் தேதி நிகழ்ந்த சஞ்சீவி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2006 மார்ச் ஏழாம் தேதி நிகழ்ந்த சங்கட்மோசன் மந்திர்-கண்டோன்மெண்ட் ரெயில்வே ஸ்டேசன் குண்டுவெடிப்புகள், 2007 மே 22-ஆம் தேதி நிகழ்ந்த கோரக்பூர் குண்டுவெடிப்பு, நவம்பர் 23-ஆம் தேதி வாரணாசி, பைசாபாத், லக்னோ நீதிமன்றங்களின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் ஆகிய வழக்குகளின் ஆவணங்களை குலைல் நியூஸ் வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உ.பி மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 9 முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்பதை இந்த ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன. மஹராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்ற பெயரில் கைதுச் செய்யப்பட்ட 6 இளைஞர்களிடம் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தி தயாராக்கிய அறிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளன. உ.பியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தாங்கள்தாம் காரணம் என்று இவர்கள் ஒப்புக்கொண்டதாக குலைல் நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் இவ்வழக்குகளில் முன்னர் உ.பி போலீஸ் கைதுச் செய்த ஒன்பது பேரைக்குறித்த எந்த ஒரு விபரமும் இந்த அறிக்கைகளில் இல்லை. அதாவது இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்ற பெயரில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தி தயாரித்த அறிக்கை சரியென்றால், முன்னர் உ.பி போலீஸ் கைதுச் செய்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் ஆவர். ஆனால், இது தெளிவான பிறகும் உ.பி போலீஸ் அவர்களை விடுதலைச் செய்வதற்கு பதிலாக நீதிமன்றத்தில் ஆவணங்களை அளிக்காமல் மூடி மறைக்கவோ, தங்களுடைய பொய்க் கூற்றுக்களுக்கு ஏதுவாக அவற்றை திருத்தவோ செய்துள்ளது என்று ஆஷிஷ் கேதான் குற்றம் சாட்டுகிறார். உ.பியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் கைதுச் செய்யப்பட்ட வலியுல்லாஹ் என்ற முஸ்லிம் மார்க்க அறிஞருக்கு போலீஸ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது. ஆனால், அவர் நிரபராதி என்பதை போலீஸ் மூடி மறைத்துள்ளது. உ.பி போலீஸ் கைதுச் செய்த ஒன்பது அப்பாவி முஸ்லிம் இளைஞர்களிடம் இருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. புதிய புலனாய்வுகள் மூலம் இவை பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.அதேவேளையில் ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும் நிரபராதி என்பது நிரூபணமான சூழலில் அவர்களை விடுதலைச் செய்வதற்கு பதிலாக, அவர்கள் மீதான சில வழக்குகளை வாபஸ் பெற்று அரசியல் லாபம் தேட உ.பி அரசு முயற்சிக்கிறது.இதனால் முஸ்லிம்கள் மீது பிறருக்கு துவேஷம் ஏற்படவே உதவியது என்று ஆஷிஷ் கேதான் கூறுகிறார். தனக்கு கிடைத்த ஆவணங்களை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குலைல் எடிட்டர், பாரபட்சமற்ற விசாரணையை கோரியுள்ளார்.

No comments:

Post a Comment