நியூயார்க்:2004-ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா ஆளில்லா விமானங்களை(ட்ரோன்) பயன்படுத்தி கொலைச் செய்த மக்களின் எண்ணிக்கை 4700 ஆகும். இதனை குடியரசு கட்சியின் செனட்டரான லின்ஸ்டே க்ரேயம் கூறியுள்ளார்.
ஆனால், வாஷிங்டனில் நியூ அமெரிக்கன் ஃபவுண்டேசனின் புள்ளி விபரப்படி கொலைச் செய்யப்பட்டவர்கள் 3,293 பேர் ஆவர். லண்டனில் இயங்கும் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிஸம் கூறுவது, பாகிஸ்தானில் மட்டும் ஆளில்லா விமானத்தாக்குதலில்
3,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதாகும். பாரக் ஒபாமா அதிபரான பிறகு ட்ரோன் தாக்குதல்கள்அதிகரித்துள்ளன. இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவி மக்கள் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
No comments:
Post a Comment