பக்கங்கள்

Monday, June 24, 2013

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்க அத்வானி மீண்டும் வலியுறுத்தல்!


L.K.advani
புதுடெல்லி:கஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 60-வது நினைவு நாளையொட்டி பாரதீய ஜனதா மூத்த
தலைவரான அத்வானி, அவரைப்பற்றி “தேச ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர இந்தியாவின் முதல் தியாகி” என்ற பெயரில் தனது வலைப்பூவில் எழுதி இருக்கிறார். அதில், கஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும் நாளை நாடு ஆவலுடன்எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், இரண்டாக இருக்கும் சட்டங்கள் ஒன்றாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதை செய்வதன் மூலம் கஷ்மீர் முற்றிலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறும் என்றும் அதில் அவர் எழுதி இருக்கிறார்.
ஜம்மு-கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்பது ஹிந்துத்துவா பாசிசவாதிகளின் முக்கிய அஜண்டாவாகும். ஆட்சிக் கட்டிலில் அமர கூட்டணிக்கட்சிகளின் நிர்பந்தத்திற்கு இணங்கி இந்த அஜண்டாவை கைவிட்டது பா.ஜ.க.

No comments:

Post a Comment