Thursday, February 14, 2013

ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவினாரா?


அமெரிக்க உளவு அமைப்பான செண்ட்ரல் இண்டலிஜன்ஸ் ஏஜன்சியின்(சி.ஐ.ஏ) தலைமை பதவிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தகவல் வெளியானதாக  கடந்த பிப்ரவரி 13 அன்று சி.ஐ.ஏவின் தலைமை பதவிக்கு ஒபாமா முன்மொழிந்த ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவினார்! என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதுகுறித்த தகவல்களை ஆராய்ந்தபோது அவ்வாறான அதிகாரப்பூர்வ தகவல்களை அரசு தரப்போ அல்லது ஜான் பிரன்னனோ  வெளியிடவில்லை என்பதை தெரிந்துகொண்டோம். எனவே மேற்கண்ட தேதியில் வெளியிடப்பட்ட செய்தி உறுதிசெய்யப்படாத ஒன்று என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆசிரியர்
தூது ஆன்லைன்

No comments:

Post a Comment