
கெய்ரோ:57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேசனின்(ஒ.ஐ.சி) புதிய பொதுச் செயலாளராக முன்னாள் சவூதி கலாச்சார-செய்தி ஒலிபரப்பு அமைச்சர் இயாத் மதனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த 2 தின ஒ.ஐ.சி உச்சிமாநாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பொதுச் செயலாளராக இயாத் மதனி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது துருக்கியின் இக்மலுத்தீன் இஹ்ஸான் ஓக்லு பொதுச் செயலாளராக உள்ளார்.
எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இயாத் மதனியின் பெயரை முன்மொழிந்தார். 22 மாதங்களாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா விவகாரம் உச்சிமாநாட்டின் முக்கிய விவாத கருப்பொருளாக அமைந்தது.
No comments:
Post a Comment