Saturday, February 16, 2013

இஸ்ரேல் சிறையில் தூக்கில் தொங்கியவர் ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொலையில் குற்றவாளி!


Ben Zygier
குவைத் சிட்டி:இஸ்ரேல் சிறையில் தூக்கில் தொங்கி மரணித்ததாக கூறப்படும் ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த பென் ஸைகீர்(Ben Zygier) ஹமாஸ் தலைவர் மஹ்மீத் மப்ஹூஹை துபாயில் வைத்து படுகொலைச் செய்த குற்றவாளிகளில் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பயங்கரவாத உளவு அமைப்பான மொஸாதின் 20 உளவாளிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி துபாயில் உள்ள ரொடானா ஹோட்டலில் வைத்து மப்ஹூஹை கொலைச் செய்தனர்.
இதனை துபாய் போலீஸ் கண்டுபிடித்தது. இக்குழுவில் ஸைகீர் உள்பட 3 ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த நபர்கள் இடம் பெற்றிருந்தனர் என்று குவைத்தில் இருந்து வெளியாகும் நாளிதழான அல் ஜரீதா கூறுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலின் இரட்டை குடியுரிமையை பெற்ற ஸைகீர் தாம் மப்ஹூஹின் கொலைக் குறித்து கூடுதல் விபரங்களை துபாய் போலீசுக்கு அளித்துள்ளார்.
இக்குழுவில் ஒரு பெண்ணும், இரண்டு ஃபலஸ்தீனிகளும் இடம் பெற்றிருந்தனர். மப்ஹூஹ் கொலைக்கு பிறகு துபாயில் தலைமறைவாக இருந்த ஸைகீரை மொஸாத் கடத்திச் சென்றதாக அப்பத்திரிகை கூறுகிறது. பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்பாடுச் செய்ய ஸைகீர் தொடர்ந்து துபாய் போலீஸை தொடர்பு கொண்டுவந்தார். ’எக்ஸ்’ என பெயரிட்டு இவர் இஸ்ரேலில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மொஸாதின் ரகசியங்கள் கசியாமலிருக்கவே மொஸாத் ஸைகீரை பிடித்தது என்று ஆஸ்திரேலிய பத்திரிகை கூறுகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஸைகீரை சிறையில் சந்தித்து இரண்டு தினங்கள் கழிந்த பிறகு அவர் தூக்கில் தொங்கினார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஸைகீரின் தந்தையான பிரபல யூத புரோகிதர் இதனைக் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்று ஏ.பி.சி நியூஸ் கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் வைத்து ஸைகீர் மொஸாதிற்கு தேர்வுச் செய்யப்பட்டார். மொஸாதின் 131-வது பிரிவில் அவர் தேர்வுஸ் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment