பக்கங்கள்

Thursday, February 14, 2013

கஷ்மீர்:சி.ஆர்.பி.எஃப் பிரிவு மீது வழக்கு!


ஸ்ரீநகர்:அப்ஸல் குரு அநியாயமாக தூக்கிலிட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சி.ஆர்.பி.எஃப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
சி.ஆர்.பி.எஃபின் 92-வது பட்டாலியன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பாராமுல்ல டெபுட்டி கமிஷனர் ஜி.ஏ.க்யாஜா தெரிவித்துள்ளார். வழக்கு பதிவுச் செய்யப்பட்டதை தொடர்ந்து 2 சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த வேளையில் எக்ஸ்க்யூடிவ் மாஜிஸ்ட்ரேட் பொறுப்பு வகித்த சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் நயீம் பால்கி அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. சிறிய அளவிலான கல்வீச்சைத் தொடர்ந்து அதிக சி.ஆர்.பி.எஃப் படைவீரர்களை குவித்ததே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சி.ஆர்.பி.எஃபுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் உபைத் முஸ்தாக் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனிடையே கஷ்மீரில் நான்காவது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. அப்ஸல் குருவின் ஸோப்பூரில் உள்ள வீட்டிற்கு செல்லும் வழிகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

No comments:

Post a Comment