பக்கங்கள்

Sunday, February 10, 2013

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!


பிப் 09/2013: அஃப்சல் குருவுக்குநிறைவேற்றப்பட்ட தூக்கு அவசரத்தனமானது, ஆபத்தானது. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தூக்கு தண்டனைகள் மர்மமான முறையில் அவசரமாகநிறைவேற்றப்பட்டது  ஏன்?
அப்சல் குரு: ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பிறந்தவர். மருத்துவ கல்லூரி முதல் ஆண்டோடு படைப்பை முடித்து கொண்டவர். நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார்.

நாடாளுமன்ற தாக்குதல்: “2001 டிசம்பர் 13 ம் நாள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த 5 பேர் ஆயுதங்களோடும், வெடிபொருட்களோடும் ஒரு அம்பாசிடர் காரை நாடாளுமன்றத்தின் நுழைவாயில் வழியாக  ஓட்டி  வந்தார்கள். அதை தடுத்து நிறுத்தியதும் அவர்கள் வெளியே குதித்து சரமாரியாக சுட ஆரப்பித்தனர். 

இந்த சண்டையில் காரில் வந்த 5 பேரும், காவலாளிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். உலக அதிசயமாக, தாக்குதலுக்கு வந்தவர்கள் தாங்கள் யார்? என்பதற்கான அடையாள அட்டைகள், செல்போன்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் கூடவே கொண்டு வந்திருந்தனர்.

BJP யின் ஊழல் அரசியல்: “2001 டிசம்பர் 13 ம் நாள் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. ஊழல் குற்றச் சாட்டுகளால், அப்போதைய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் குளிர்கால கூட்ட தொடரை நடத்த முடியாது என்கிற சூழல் நிலவியது.அதை திசை திருப்ப நடத்தப்பட்டதே இந்த நாடாளுமன்ற தாக்குதல்.

அதிர்ச்சி ஊட்டும் ஆதாரங்கள்: பாராளுமன்றத்தை தாக்க வருபவர்கள் அடையாள அட்டைகள், செல்போன்கள், புகைப்படம் எல்லாம கொண்டு வருவார்களா? இது ஒரு திட்டமிட்ட சதி, பாரதிய ஜனதா ஏற்பாடு செய்த கூலிப்படை தாக்குதலே. இது பலகோடி ரூபாய்களை கொடுத்து நடத்தப்பட்ட நாடகமே அன்றிவேறில்லை.

பன்னாட்டு கூலிப்படைகள்: உலகம் தழுவிய கூலிப்படைகள்   இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிகளும் தங்களது ஆட்சியை, அதிகாரத்தை  காப்பாற்றி கொள்ள, நடத்தும் அரசியல் படுகொலைகள், தாக்குதல்கள் இவற்றிக்கு இந்த கூலி படைகளையே அணுகுகிறார்கள். 

ஆயுத வியாபாரத்திற்கு அடுத்தப்படியாக உலக அளவில் கொடி கெட்டி பறப்பது இந்த கூலிப்படை வியாபாரமே. உலகின் எந்த நாட்டிலும் தாக்குதல் நடத்த இவர்களுக்கு ஆட்கள் இருக்கிறது. ஒருநாட்டில் குழப்பத்தை உண்டாக்க, தற்கொலை தாக்குதல் நாடத்த, குண்டு வெடிப்புகளை நடத்த அரசாங்கங்கள் இந்த கூலிப்படை நிறுவனங்களையே தொடர்பு கொள்கின்றன.

பெரும் அரசியல் தலைவர்களை போட்டு தள்ளுவதாக இருந்தாலும் சரி, ஒரு நாட்டில் குழப்பத்தை உண்டாக்க நினைத்தாலும் சரி, போர் காலங்களில் எதிரி நாட்டில் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த நாட்டு மக்களிடம் ஒரு அச்சத்தை உண்டாக்கி இதன்மூலம் போர்களை தங்களுக்கு சாதகமாக திருப்புவது. தங்களது ஆட்சிகளுக்கு எதிராக போராடும் மக்களை, மக்கள் தலைவர்களை கொல்ல இந்த கூலி படை நிறுவனங்களையே அணுகுகிறார்கள். 

உளவுத்துறையும் பொய்யான கைதுகளும்: நடத்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் நடாகம் முடிந்ததும் போலீஸ் மற்றும்  உளவுத்துறை திட்ட மிட்டபடி பலி கிடாக்களை தேடியது. தாக்குதல் முடிந்த மறுநாளே குற்றவாளிகளை யார் என்று அறிவித்தது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு. மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில் 5பேர் தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள். மீதம் உள்ள 7 பேரில் 3 பேர் பாகிஸ்தானியர். மற்ற 4 பேர் இந்தியர்கள். 

பொய்யாக கைது செய்யப்பட்ட இந்தியர்கள்: ஜீலானி, சவுகத் ஹுசைன் குரு, சவுக்கத்தின் மனைவி அப்சான் குரு, அப்சல் குரு, ஆகிய நான்கு பேர்கள் இந்தியர்கள். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் சவுக்கத்தின் மனைவி அப்சான் குரு, ஜீலானி ஆகிய இருவர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். சவுகத்துக்கு 10 சிறை தண்டனையும், அப்சல் குருவுக்கு 3 ஆயுள் தண்டனையும், இரட்டை மரண தண்டனையும் வழங்கப்பட்டது. 

இந்திய நீதிமன்றங்கள்: இந்தியாவின் நீதிமன்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவதில் அவசரமும், நீதி வழங்குவதில் காலதமதமும், நீதி மறுப்பதில் முதலிடத்திலும் இருக்கின்றன. பாபர் மசூதி தீர்ப்பை சட்டப்படி சொல்லாமல் பெரும்பான்மையினரின் நம்பிக்கை அடிப்படையில் சொன்னார்கள். அதுபோன்று அப்சல் குரு விசயத்திலும் தீர்ப்பை "சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் செய்ய" என்று சொல்லி இருக்கிறார்கள்.

அநீதியான தீர்ப்பு:  அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை, சதி திட்டம் மற்றும் குற்றத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான சாட்சியங்கள் இல்லை என்று சொல்லும் நீதிமன்ற தீர்ப்பு, தனது கருத்தில் தானே முரண்பட்டு சூழ்நிலை சாட்சியங்கள் அடிப்படையில் என்று ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும் என்று சொல்லி மரண தண்டனை அறிவித்திருக்கிறது.

ஒரு சார்புடைய நீதிமன்றங்கள்; சிறுபான்மை மக்கள் விசயத்தில் அவசரமாக தீர்ப்பை எழுதும் நீதிமன்றங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு கலவரங்களை நடத்தியவர்கள் விசயத்தில் அமைதி காக்கின்றன. ஆதாரம் இல்லாத விசயத்திற்கு தூக்கு தண்டனை, அதேநேரம் பகிரங்கமாக ஆதாரம் உள்ள விசயங்களுக்கு கைதுகள் கூட நடப்பதில்லை. மும்பையில் பல்வேறு கலவரங்களை நடத்திய பால்தாக்ரே மீது சாகும் வரை கை வைக்க துணிவில்லை. அத்வானி, மோடிபோன்ற பயங்கரவாதிகள் வெளியே  நடமாடுகிறார்கள் இதுதான் இந்திய நீதி!

யாரை திருப்பதிபடுத்த இந்த தூக்கு: இது பா.ஜ.க வை எதிர்கொள்ளவும், அடுத்த  நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டுமே, காங்கிரஸ் அரசால் இந்த தூக்கு அவசர அவசரமாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. காவி தீவிரவாத குற்றச்சாட்டை முன் வைத்த உள்துறை அமைச்சரை குறிவைக்கும் பாரதிய ஜனதாவை இதன் மூலம் எதிர்க்கொள்ள முடியும் என காங்கிரஸ் நம்புகிறது. பாரதிய ஜனதாவுக்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாராளுமன்ற தாக்குதல் தேவைப்பட்டது. இப்பொழுது தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசுக்கு அப்சல் குருவின் தூக்கு தேவைபடுகிறது. 
*மலர் விழி*

No comments:

Post a Comment