
புதுடெல்லி:கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்’ திரைப்படம் முஸ்லிம்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக இருந்தால் உத்தர பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்படும் என்று அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதிக் கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
கமலின் விஸ்வரூபம் திரைப்படம் உலக மக்கள் அனைவருக்கும் நல்லுபதேசமாக இறக்கியருளப்பட்ட புனித திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளையும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவமதித்துள்ளது. இதனால் இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் 2 வார காலம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில வெளிநாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச் செயலாளர் ராம் ஆஸ்ரே குஷ்வஹா விஸ்வரூபம் திரைப்படம் குறித்து கூறியிருப்பது:விஸ்வரூபம் திரைப்படத்தின் சில பகுதிகள், குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகத் தெரிகிறது. படத்தை அதிகாரிகள் பாரவையிடுவர். அதில் அவ்வாறு காட்சிகள் இருப்பின் படட்தை உத்தர பிரதேச மாநிலத்தில் திரையிட தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment