Thursday, February 14, 2013

அப்ஸல் குரு:பிரதமருக்கு 202 பிரமுகர்கள் கையெழுத்திட்ட கடிதம்!


புதுடெல்லி:அப்ஸல் குருவுக்கு அநியாயமாக நிறைவேற்றப்பட்ட மரணத் தண்டனைக் குறித்து நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அப்ஸல் குரு மரணத்தண்டனை தொடர்பாக நிலவும் மர்மங்களை நீக்குமாறு கடிதத்தில் முக்கிய கோரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது. அப்ஸல் குருவின் மரணத்தண்டனையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்ஸல் குருவின் குடும்பத்தினருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இதில் பல வகையான மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டுள்ளது என்று கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment