புதுடெல்லி:கடந்தவாரம் ஜார்க்கண்ட் மாநிலம் லடேகரில் நடந்த என்கவுண்டருக்கு பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் தங்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாக கிராமவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இம்மாதம் 7-ஆம் தேதி நடந்த என்கவுண்டரில் ஏழு சி.ஆர்.பி.எஃப் படைவீரர்களும், ஒரு ஜார்க்கண்ட் ஜாக்வார் போலீஸ்காரரும் கொல்லப்பட்டனர்.
இறந்த உடல்களை மாற்றும் வேளையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நான்கு கிராமவாசிகளும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் தங்களை வலுக்கட்டாயமாக இறந்த உடல்களை தேடுவதற்கு அழைத்துச் சென்றதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களில் மாவோயிஸ்டுகள் வெடிக்குண்டுகளை உடலின் உள்ளேவைத்து தைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒன்று வெடித்தது. ஆனால், எந்தவொரு பாதுகாப்பு படையினருக்கும் இந்த குண்டுவெடிப்பில் காயம் ஏற்படவில்லை.
இறந்த உடல்களின் ஐந்து மீட்டர் தொலைவில் பாதுகாப்பு படையினர் நின்றிருந்தனர். சம்பவம் நடந்த இரவு போலீஸ் உத்தரவின் படி வந்த கிராம தலைவர், இறந்த உடல்களை தேடும் பணியில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் இல்லையெனில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தும் எனவும் மிரட்டியதாக கொல்லப்பட்ட கிராமவாசி ஜுகேஷ்வரனின் சகோதரர் குமார் புஜ்யான் கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து பெண்களும், குழந்தைகளும் அடங்கிய குழுவினரை இருபுறமும் கேடயமாக கொண்டு சி.ஆர்.பி.எஃப் அழைத்துச் சென்றது என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ஜார்கண்ட் ஐ.ஜி எஸ்.என்.பிரதான் மறுக்கிறார்.கிராமவாசிகளின் வீடுகளுக்கு சென்ற மாவோயிஸ்டுகள் போலீசாருக்கு எதிராக புகார் அளிக்க மிரட்டியதாக லடேகர் எஸ்.பி க்ராந்திகுமார் கர்தேசி கூறுகிறார்.
No comments:
Post a Comment