புதிய குடியிருப்பு அமைப்பதற்காக இஸ்ரேல், குடில்களில் தங்கிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை மேற்கு கரை பகுதியிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியேற்றியுள்ளது. மேற்கு கரை பகுதியில் குடில்கள் அமைத்து தங்கிவந்த பாலஸ்தீனர்களை வெளியேற்றுவது தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் முழுமையான உத்தரவை பிறப்பிக்காத நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ வெளியேற்று உத்தரவை அறிவித்தார். பிரதமரின் உத்தரவை அடுத்து, அந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது என்ற முனைப்புடன் இஸ்ரேல் அரசு இந்த அதிரடி உத்தரவை உடனே பிறபித்திருக்கிறது. வெளியேற மறுத்த பாலஸ்தீனர்கள் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டனர். இதுபோன்ற இஸ்ரேலின் அராஜக நடவடிக்கைகள்தான் இஸ்ரேல்-பாலஸ்தீனுக்கு இடையேயான அமைதி முயற்சிக்கு பங்கம் விளைவிப்பதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. மேற்கு கடற்கரை பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புகள் அமைக்கும் விவகாரத்தினால்தான் 2010 ஆம் ஆண்டு நடந்த நேரடி அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
No comments:
Post a Comment