பக்கங்கள்

Saturday, January 26, 2013

போர்க்களத்தில் இனி அமெரிக்க பெண் ராணுவத்தினரும் பங்கேற்பர்!


வாஷிங்டன்:போர்க்களங்களில் பெண் ராணுவத்தினருக்கான தடையை நீக்க அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா தீர்மானித்துள்ளார்.ராணுவ தலைவர்களின் சிபாரிசுகளைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை ரத்துச் செய்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கமெண்டோ படைகளில் இனி பெண்கள் இடம் பெறுவர்.
ராணுவ துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர அமெரிக்கா தீர்மானித்துள்ளது.இவ்வாண்டு முதல் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். ஆனால், சிறப்பு ராணுவ பிரிவுகளான நேவி ஸீல்ஸ், டெல்டா ஃபோர்ஸ் ஆகியவற்றில் பெண்கள் உடனடியாக சேர்க்கப்படமாட்டார்கள். செனட்டின் ராணுவ சேவை குழு சேர்மன் கார்ல் லெவின் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் தீர்மானத்தை வரவேற்றுள்ளார்.
ஆப்கான் உள்பட ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினருடன் பெண்களும் பணியாற்றினாலும் மருத்துவ உதவி அளிக்கும் பணிகள் மட்டுமே செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment