பக்கங்கள்

Wednesday, January 30, 2013

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் கட்ட துருக்கி திட்டம்!


Turkey unveils plan for world's biggest airport
அங்காரா:உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தைக் இஸ்தான்புல்லில் கட்ட துருக்கி தீர்மானித்துள்ளது. 9.3 பில்லியன் டாலர் செலவில் ஆண்டுக்கு 150 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த விமான நிலையம் இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
6 ஓடு தளங்களைக் கொண்ட இந்த விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் குறித்த ஏலத்தை பதிவு செய்ய வரும் மே மாதம் வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் போக்குவரத்து துறை அமைச்சர் பினலி இல்ட்ரிம் கூறியுள்ளார்.
மேலும் முழுமையான பயணிகள் பயன்பாட்டில் இந்த விமான நிலையம் உலகில் முதல் இடத்தில் இருக்கும் என்றும் அவர் இல்ட்ரிம் கூறியுள்ளார். 7 மில்லியன் யூரோ செலவில் கட்டப்படும் இந்த விமான நிலையத்தின் பணிகள் நான்கு கட்டங்களாக நடைபெறும் என்றும் முதல் கட்டத்தில் 90 மில்லியன் பயணிகளை கையாளும் விதமாக உருவாக்கப்படும் என்றும் இதன் பணிகள் வரும் 2017 ஆம் ஆண்டு முடிவடையும் என்றும் இல்ட்ரிம் கூறியுள்ளார்.
துர்கிஷ் கட்டுமான நிறுவனமான டி.ஏ.வி மற்றும் பிரபல கட்டுமான நிறுவனமான லிமாக் நிறுவனமும் இந்த பணியை பெற ஆர்வமாக உள்ளன.  இதில் டி.ஏ.வி நிறுவனம் துருக்கியின் முதல் இடத்தை பிடித்துள்ள அடாடுர்க் கையாளுவது குறிப்பிடத்தக்கது.  துருக்கியின் அதிபராக எர்துகான்  பதவி ஏற்ற பின்னர் ஐரோப்ப நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக துருக்கி தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment