Sunday, January 27, 2013

குடியரசு தினத்தை கொண்டாடிய டெல்லி கௌசியா காலனி மக்கள்!


கொடியேற்றிய பொழுது
புதுடெல்லி:டெல்லி மெஹர்வலியின் கௌசியா காலனியில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூக மக்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் கடந்த டிசம்பர் 12 தரைமட்டமாக்கி, அவர்களை கடுங்குளிரில் தள்ளியது டெல்லி மாநில காங்கிரஸ் அரசு.
வரலாறு காணாத பனி மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டு, 20 நாட்களில் 4 முஸ்லிம்கள் மரணமடைந்துவிட்டனர். மேலும் பல பேர் மிகவும் பாதிக்கக் பட்டு வருகின்றனர். தற்பொழுது அந்த மக்கள் மிகவும் துயருதுடன் நடை பாதைகளில் குடில்கள் அமைத்து வாழ்ந்து வருகினறனர். தங்கள் வீட்டை அரசாங்கம் இடித்தாலும், தாங்கள் நடு ரோட்டில் இருந்தாலும் தேசிய பற்றுள்ள அந்த காலனி மக்கள் குடியரசு தினத்தை கொண்டாட மறக்கவில்லை.
 ஜனவரி 26 அன்று தங்கள் பகுதிகளில் கொடி ஏற்றி குடியரசு தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக நாட்டு பற்றுடன் கொண்டாடினர். (இவர்கள் நாட்டுப்பற்று உள்ளதா என்று நினைக்க வேண்டாம் காரணம் இவர்களுடைய முன்னோர்கள் யார் என்று தெரியுமா இந்த நாட்டை ஆண்ட பகதூர் ஷா உள்பட முகலாய மன்னர்களின் வாரிசுகள்தான் இவர்கள். இந்த நாட்டுக்காக உழைத்து சுதந்திரம் கிடைப்பதருக்கு உறுதுணையாக இவர்களுடைய வாரிசுகள்தான் இன்று நடு ரோட்டில் கஷ்டபட்டுக்கொண்டு இருகின்றனர்.)
இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொது செயலாளர் ஹாஃபீஸ் மன்சூர் அலி கான், சமூக ஆர்வலர் முஹமது தன்வீர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஷானு ரெஹ்மான் உள்பட பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment