கொல்கத்தா:மேற்கத்திய கலாச்சார ஆதிக்கமே இந்தியாவில் பாலியல் பலாத்காரங்கள் நடக்க முக்கிய காரணம் என்று பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்தா சரஸ்வதி கூறியுள்ளார்.
சினிமா, க்ளப் கலாச்சாரம், போதைப் பொருள் ஆகியன நாட்டின் பாரம்பரிய விழுமியங்களையும், தத்துவங்களையும் அழித்துவிட்டன. சுதந்திரத்திற்கு முன்பு நாம் அனைவரும்பாதுகாத்து வந்த கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளின் பெரியதொரு பகுதி 65 ஆண்டுகள் கழிந்த பிறகு இழக்கப்பட்டுவிட்டன என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம் திடீரென நடக்கவில்லை. வளர்ச்சி மற்றும் நாகரீகத்தின் பெயரால் கலாச்சாரம், பண்பாட்டின் எல்லைகளை மீறியதே இதற்கு காரணமாகும். இத்தகைய சம்பவங்கள் நடக்காமலிருக்க மக்கள் உறுதிச் செய்யவேண்டும். பெண்களை மதிக்கவே இந்திய கலாச்சாரம் கற்றுத் தருகிறது என்று நிச்சலானந்தா கூறினார்.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பருவ வயதை அடையாத சிறுமியை இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். குண்டப்ரா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளியை கைது செய்துள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் சாதனா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஸ்தியில் நான்கு வயது சிறுமியை பருவ வயதை அடையாத சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை போலீஸ் தேடி வருகிறது.
No comments:
Post a Comment