Monday, January 28, 2013

விஸ்வரூபம்: அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுமாறு கமலஹாசனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

தமிழக அரசு விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் தடையை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து அந்த மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை 28ந் தேதிக்கு தள்ளிவைத்தது. மேலும், நீதிபதி படத்தை பார்ப்பதாக அறிவித்தார். இந்நிலையில், நீதிபதிக்கு படம் காண்பிக்கப்பட்டது. இன்று விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் இந்த பிரச்சனை குறித்து அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுமாறு அறிவுரை கூறியுள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் வழக்கு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று கூறி ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment