Tuesday, January 8, 2013

முஸ்லிம் பெண் பஞ்சாயத்து துணை தலைவியை தாக்கிய உயர்ஜாதி வெறியர்கள்!


muslim women attacked in bihar
சிவான்(பீகார்):சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த பஞ்சாயத்து துணை தலைவரான பெண்ணையும், அவரது மகனையும் மேல்ஜாதி வெறியர்கள் தாக்கியுள்ளனர். தங்களின் முன்னால் நாற்காலியில் அமர்ந்ததே இருவரும் செய்த குற்றமாகும்.
நேற்று முன் தினம் அரசு பள்ளிக்கூடத்தில் நடந்த கவுரியா கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் அஸ்மா காட்டன், அவரது மகன் அஃப்தாப் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாயினர். உயர்ஜாதியினரை அவமதித்தாக கூறி ஆறு குண்டர்கள் இவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். அஸ்மா, ஸதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மேல்ஜாதி வெறியர்கள் மீது வழக்கு பதிவுச் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவான் போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை பீகார் சிறுபான்மை கமிஷன் தனது தீவிர பரிசீலனைக்கு எடுத்துள்ளது. அஸ்மாவின் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை அளிக்க சிறுபான்மை கமிஷன் தலைவர் நவ்ஷாத் அஹ்மத் போலீசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டிற்கு செல்வதற்கான வழியை தடுத்தது, அச்சுறுத்தியது ஆகிய குற்றங்களுக்காக மேல் ஜாதி குண்டர்கள் மீது மற்றொரு வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment