Sunday, January 20, 2013

ஒப்பந்தம் மீறல்:தஹ்ரீருல் காதிரிக்கு கனடா போலீஸ் விசாரணைக்கு அழைப்பு!


கோபன்ஹெகன்:ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி பாகிஸ்தானின் சூஃபி அறிஞரும், மின்ஹாஜுல் குர்ஆன் இண்டர்நேசனலின்(எம்.க்யூ.ஐ) தலைவருமான டாக்டர் தஹ்ரீருல் காதிரியை கனடா அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கனடாவில் அபயம் தேடி அளித்த மனுவில் இனி பாகிஸ்தானுக்கு செல்லமாட்டேன் என்று காதிரி அளித்த கடிதத்தில் குறிப்பிட்டதை மீறியதற்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஆஜராகவேண்டும் என்று கனடா போலீஸ் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
தெஹ்ரீக்-இ-தாலிபானில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறி கடந்த 2008-ஆம் ஆண்டு காதிரி, கனடாவில் அபயம் தேடினார். 2009-ஆம் ஆண்டு காதிரியின் கோரிக்கையை கனடா அரசு அங்கீகரித்தது.இதற்கு பிறகு ஆரோக்கிய காரணங்களை கூறி கனடா அரசிடமிருந்து பொருளாதார உதவியையும் காதிரி பெற்றுள்ளார்.
நபி(ஸல்) அவர்களின் உருவத்தை அவதூறாக இழிவுப்படுத்தும் விதத்தில் கார்ட்டூனாக வரைந்த டென்மார்க் பத்திரிகை கார்ட்டூனிஸ்டுடன் சந்திப்பை நடத்தியதற்காக தெஹ்ரீக் – இ -தாலிபான், லஷ்கர் – இ – ஜங்வி, ஷிபாயே ஸஹாபா ஆகிய அமைப்புகள் காதிரிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தன.
சீர்திருத்தம் கோரி லாகூரில் இருந்து காதிரி துவங்கிய பேரணி நேற்று முன் தினம் இஸ்லாமாபாத்தில் நிறைவடைந்தது. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் வியாழக்கிழமை இரவு அவர் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டார். காதிரியின் கட்சி தீவிர அரசியலில் இறங்கலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த வேளையில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் விருந்தினராக தஹ்ரீருல் காதிரி வந்திருந்தார். ஒரு மாதம் முழுவதும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காதிரி மோடியுடன் மேடையில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment