Tuesday, January 29, 2013

அயோத்தியில் பழைய நிலை தொடரவேண்டும் – உச்சநீதிமன்றம்!


SC
புதுடெல்லி:இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் பழைய நிலை(statusquo) தொடரவேண்டும் என்றும், அங்கு எவ்வித தோண்டுதலும் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 67 ஏக்கர் நிலத்தின் தற்போதைய நிலைக்கு கேடு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை நீதிபதி அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தடை ஏற்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தற்காலிக கோயிலின் தார்பாள் மற்றும் மேல்கூரை புதுப்பிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. தார்பாளையும், மேல்கூரையும் புதுப்பிக்கலாம் என்றும் ஆனால், பழைய நிலை தொடரவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் கூறியது.

No comments:

Post a Comment