பக்கங்கள்

Wednesday, January 16, 2013

மனோரமா தேவி வழக்கு:ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கையும் இல்லை, விசாரணை அறிக்கையும் வெளியாகவில்லை.



புதுடெல்லி:2004-ஆம் ஆண்டு மணிப்பூரில் மனோரமா தேவி என்ற பெண்மணியை கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்து சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் குற்றவாளிகளான பாதுகாப்பு படையினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள சூழலில் சட்டத்தை அமல்படுத்த கடமைப்பட்டுள்ள அரசு இவ்விவகாரத்தில் தொடர்ந்து சாதித்து வரும் மெளனம் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
2004-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மனோரமா தேவியை அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். மறுநாள் மனோரமா
தேவி அவரது மர்ம உறுப்புகளிலும் குண்டடிபட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.மருத்துவ சோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. மிகவும் சர்ச்சையை கிளப்பிய இச்சம்பவம்  குறித்து விசாரணை நடத்த அரசு அமைத்த நீதிபதி உபேந்திரா கமிஷன், ராணுவ வீரர்களை குற்றவாளிகள் என்று
கூறியபோதும் அவ்வறிக்கையை வெளியிட அரசு தயாராகவில்லை. யாருக்கு எதிராகவும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கமிஷனின் அறிக்கையை வெளியிட பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ ஏன் தயாராகவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனோரமா தேவியின் குடும்பத்தினருக்காக வாதாடும் மூத்த
வழக்கறிஞர் காலின்  கான்ஸால்வாஸ் கேள்வி எழுப்புகிறார்.கடந்த 10 ஆண்டுகளில் ராணுவத்தினர் நடத்திய 20 பாலியல் வன்கொடுமைகள் மணிப்பூரில் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.ஆனால் ஒன்றில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மணிப்பூரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்(AFPSA) பாதுகாப்பில் அபயம் தேடும் பாதுகாப்பு படையினர் தங்களை தெய்வங்கள் என்று கருதுகின்றனர் என்று கான்ஸால்வாஸ் கூறுகிறார்.
மனோரமா தேவியின் கொலையை கண்டித்து 12 பெண்கள் முழு நிர்வாணமாக ‘Rape us’ என்ற பேனர்களுடன் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியது சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது.

No comments:

Post a Comment