பக்கங்கள்

Thursday, January 17, 2013

எண்ணெய் ஆலை மீது தாக்குதல் - அமெரிக்கர்கள் கைது!


அல்ஜீரியா: புதனன்று இஸ்லாமியப் போராளிகள் அல்ஜீரியாவின் இன் அமீனாஸ் எனும் பகுதியிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினுள் நுழைந்து தாக்குதல் நிகழ்த்தி 41 வெளிநாட்டினரைக் கைதிகளாகப் பிடித்துள்ளனர். இவர்களுள் பிரிட்டிஷ், பிரான்சு, அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பிணைக் கைதிகளாக பிடிபட்டுள்ள வெளிநாட்டவருள் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாட்டினர் அடக்கம்.
மாலி நாட்டில் இஸ்லாமியப் போராளிகளின்மீது போர் தொடுத்துள்ள பிரான்சு நாட்டிற்கு எதிராக இத்தாக்குதலைத் தொடுத்துள்ள இஸ்லாமியப் போராளிக் குழுவினர், பிரான்சு நாடு மாலியில் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளனர். அல்ஜீரியா, நார்வே நாட்டின் எண்ணெய் நிறுவனம் ஆகியனவற்றுக்குச் சொந்தமான இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினுள் பிரிட்டன் நேரம் அதிகாலை 5 மணிக்கு மூன்று வாகனங்களில் வந்து நுழைந்த போராளிகள் தாக்குதல் நிகழ்த்தி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். அல்ஜீரியாவின் இராணுவப் படை எண்ணெய் நிலையத்தை சுற்றிவளைக்க முயன்று வருகிறது. பணயக் கைதிகளை விடுவிக்க முயன்றால் விளைவு மோசமானதாக அமையும் என்று போராளிகள் அறிவித்துள்ளனர்.
சஹாராவில் பல ஆண்டுகளாக அல்-காயிதா போராளிகளுக்குத் தலைமை தாங்கிய முக்தார் பில்முக்தாரை பிரான்சு நாட்டு உளவுத்துறை பிடிக்க இயலாதவர் என்று அறிவித்திருந்தது. இந்த முக்தார் பில்முக்தாரின் தலைமையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக மொரிடானியாவின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment