பட்டுக்கோட்டை:நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSP-யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக செல்லும் காட்சி
DSP-யிடம் கொடுக்கப்பட்ட மனு





No comments:
Post a Comment