நியூயார்க்:ஆக்கிரமிப்பு ஃபலஸ்தீனில் குடியிருப்புக்களை கட்டுவதை தொடர்ந்தால் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று ஃபலஸ்தீன் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியால் அல் மாலிகி தெரிவித்துள்ளார். குடியிருப்புக்களை கட்டுவதை தொடருவதா? வேண்டாமா? என்பதை இஸ்ரேல் முடிவுச்செய்யவேண்டும். ஃபலஸ்தீன் மண்ணில் புதிய குடியுருப்பு கட்டுமானம் துவங்கினால் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவதை தவிர ஃபலஸ்தீனுக்கு இதர வழிகள் இல்லை என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அல் மாலிகி கூறினார்.
ஜெருசலத்தின் சுற்றுவட்டார பகுதிகளோடு சேர்ந்த E 1 என்று பெயரிடப்பட்டுள்ள பகுதிகளில் புதிய கட்டிட கட்டுமானங்களை துவங்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுள்ள ஃபலஸ்தீனுக்கு இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராக ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியும்.
இஸ்ரேல் குடியுருப்புக்களை கட்டுவதை அதிகரிப்பதுதான் ஃபலஸ்தீன் – இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைக்கு முக்கிய தடையாக கருதப்படுகிறது. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஃபலஸ்தீன் மண்ணை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களில் வசிக்கின்றனர். 1967-ஆம் ஆண்டு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்தவைதான் இப்பகுதிகள்.
No comments:
Post a Comment