பக்கங்கள்

Wednesday, January 16, 2013

மாலியில் புரட்சியாளர்களின் மீது தாக்குதலை தீவிரபடுத்தும் பிரெஞ்சு அரசு


மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக போராடும் புரட்சியாளர்களின் மீது தாக்குதலைத் தீவிரபடுத்த பிரெஞ்சு அரசு தனது ராணுவ பலத்தை மும்மடங்காக உயார்த்த திட்டமிட்டுள்ளது. தாக்குதலில் 2500 ராணுவ வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜீன் ய்வேஸ் கடந்த செவ்வாயன்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்திருக்கும் பிரெஞ்சு ராணுவதளத்திற்கு சுற்றுபயணம் வந்த பிரான்ஸ் அதிபர் ஹோல்லண்டே தற்போது இருக்கும் 750 ராணுவ வீரர்களை விரைவில் எண்ணிக்கையில் அதிகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு அன்று பிரெஞ்சு போர் விமானங்கள் மாலியின் கோவா மற்றும் கிடல் ஆகிய நகரங்களில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதில் புரட்சியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கிடல் நகரத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்ஹபோ என்னும் டவுனில் புரட்சியாளர்களின் இருப்பிடத்தின் மீது பிரான்ஸ் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் இந்த தாக்குதலுக்கு ஐநா சபையும் கடந்த செவ்வாய் அன்று அனுமதி அளித்திருந்தது. மேலும் அமெரிக்காவும் இத்தாக்குதலுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment