மலப்புரம்:கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக மவ்லவி அஷ்ரஃப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கான கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்வுச் செய்யும் பொதுக்குழு மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் வைத்து நடைபெற்றது.
தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் பி.கோயா, தேர்தல் கண்காணிப்பாளராக செயல்பட்டார்.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்:
மவ்லவி அஷ்ரஃப்(திருவனந்தபுரம்) – மாநில தலைவர்
கே.சாதாத்(கோழிக்கோடு) – மாநில பொதுச் செயலாளர்
சி.அப்துல் ஹமீத்( மலப்புரம்) – மாநில துணைத் தலைவர்
டி.கே.அப்துல் ஸமத்(வயநாடு), பி.நவ்ஷாத்(கோழிக்கோடு) – மாநில செயலாளர்கள்
கே.ஹெச்.நாஸர்(எர்ணாகுளம்) – மாநில பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்:டி.வி.மொய்து, சி.பி.முஹம்மது பஷீர், கே.முஹம்மது அலி, பி.நூருல் அமீன், பி.பி.ரஃபீக், எம்.ஃபாரூக், வி.எம்.அன்வர் சாதாத், கே.எஸ்.சிராஜுத்தீன், எ.அப்துல் ஸத்தார்
No comments:
Post a Comment