பக்கங்கள்

Friday, January 25, 2013

ஈராக்கில் ஷியா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு! 42 பேர் பலி!


iraq 42 dead
பாக்தாத்:வடக்கு பாக்தாதில் உள்ள ஸய்யித் ஷுஹதா மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 42 பேர் பலியானார்கள். 75 பேருக்கு காயம் ஏற்பட்டது. மரணச் சடங்கின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அரசியல் கட்சி தலைவர் ஒருவர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். அவரது மரணச் சடங்கின்போது வெடிப்பொருட்களுடன் வந்த நபர் குண்டை தாமாகவே வெடிக்கவைத்தார்.
இதில் துர்க்மான் ஃப்ரண்டின் தலைவர் அலி ஹாஷிம் முக்தார், ஸலாஹுத்தீனில் கவுன்சிலராக பதவி வகிப்பவர், ஏராளமான பழங்குடியின தலைவர்கள், மாகாண அதிகாரிகள் ஆகியோர் பலியானவர்களில் அடங்குவர்.
நேற்று முன் தினம் பாக்தாதில் நடந்த தொடர் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment