பக்கங்கள்

Tuesday, January 15, 2013

பிப்ரவரி 17-ல் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் கன்னியாகுமரியில் UNITY MARCH- பாப்புலர் ஃப்ரண்ட்



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கடந்த ஜனவரி 10ம் 


தேதி மதுரையில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கினார் . பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார் . அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம்:


பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என்ற தேசிய செயற்குழுவின் தீர்மானதின்படி அகில இந்திய அளவில் பல்வேறு நிகழ்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் பிப்ரவரி 17ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது எனவும் காஞ்சிபுரம் , திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மண்டல அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் யூனிட்டி மார்ச் (Unity March) என்ற பெயரில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கின்றது .

இப்படிக்கு

ஏ.காலித் முஹம்மது

மாநில பொதுச்செயலாளர்

தமிழ்நாடு
  

No comments:

Post a Comment