
புதுடெல்லி:கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த தகவல்களை கேட்டால், அது ரகசியமானது, யாருக்கும் தெரிவிக்க கூடாது என்று பூச்சாண்டி காட்டி வருகிறது மத்திய அரசு. இவ்வாறு தகவல்களை கேட்பவர்கள் மீது அவதூறுகளும் சுமத்தப்படுகின்றன. இதற்கு ஆதரவாக தமிழகத்தின் கைக்கூலி பத்திரிகை ஒன்றும் தொடர்ந்து அவதூறான செய்திகளை பரப்பி வருகிறது.
இந்நிலையில் அணுஉலை எதிர்ப்புக்குழு தலைவரான எஸ்.பி.உதயகுமார் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு, அமைவிடம் பற்றிய தகவல்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான மதிப்பீடு பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து இம்மனு மீதான விசாரணையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த தகவல்களை மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணைய கமிஷனர் ஷைலேஷ் காந்தி உத்தரவிட்டார்.
விசாரணையின்போது, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அணு மின் நிலையம் பற்றிய தகவல்கள் “பொது ஆவணம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது என்று உதயகுமார் தெரிவித்தார்.
அப்போது கமிஷனர் ஷைலேஷ் காந்தி, உலகமே அணு மின் நிலையத் தகவல்களை பொதுத் தகவலாகக் கருதுகிறபோது, இந்தியா மட்டும் தனது குடிமக்களை வேறுவிதமாக நடத்த எந்தக் காரணமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment