
புதுடெல்லி:மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு கேவலமான தோல்வி ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் காலியான மாநிலங்களவை இடங்களுக்குந் நடந்த தேர்தலில் மூத்த பா.ஜ.க தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சி துணைத் தலைவருமான எஸ்.எஸ்.அலுவாலியா தோல்வியை தழுவினார்.
காங்கிரஸ் கட்சியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஒரு சீட் வீதம் வெற்றிப் பெற்ற பொழுது எஸ்.எஸ்.அலுவாலியா 3 ஓட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் வேட்பாளரான பிரதீப் குமார் பால்முச்சு 25 வாக்குகளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சஞ்சீவ் குமார் 23 வாக்குகளும் பெற்று மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அலுவாலியா 20 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
82 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் 68 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 11 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்), சிபிஐ (எம்.எல்.)ஐ சேர்ந்த ஓர் உறுப்பினரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
சஞ்சீவ் குமாருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா தனது வேட்பாளரை திரும்பப்பெற்றுக் கொள்ள வேண்டுமென ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேண்டுகோள் விடுத்திருந்தது. எனினும், பாரதிய ஜனதா தனது வேட்பாளரை களமிறக்கியது. ஆட்சியை ஆதரிக்கும் சுயேச்சை உறுப்பினர்களான சாம்ரா லிண்டா, பிதேஷ் சிங் ஆகிய இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment