
புதுடெல்லி:சைபர் பாதுகாப்பிற்காக மத்திய அரசு தேசிய அளவில் புதிய அமைப்பை உருவாக்குகிறது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இம்முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுத்தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கியதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதற்காக தேசிய எச்சரிக்கை மையம் துவக்கவும் திட்டம் உள்ளது. பிரதமர் அலுவலகம் மற்றும் சி.பி.ஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்களை சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.
சாஃப்ட்வெயர் தொழில் நிறுவனமான நாஸ்கோம் தயாரித்துள்ள சைபர் பாதுகாப்புக் குறித்த அறிக்கையை வெளியிட்டு ப.சிதம்பரம் உரை நிகழ்த்தினார். சைபர் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் பல்வேறு அரசு ஏஜன்சிகளை பலப்படுத்த வேண்டியுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment