
கெய்ரோ:அரசை கலைக்கவேண்டும் என்ற கோரிக்கையை எகிப்தின் ராணுவ அரசு அங்கீகரிக்கவில்லை. இதனை கண்டித்து எகிப்து பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், சபாநாயகருமான ஸஅத் அல் கதாத்னி இதனை அறிவித்துள்ளார்.
பிரதமர் கமால் அல் கன்சூரியின் தலைமையிலான அரசு மற்றும் அமைச்சர்களான ராணுவ தலைவர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனத்தை பதிவுச்செய்தனர்.
எகிப்தில் ஆட்சியை நிர்வகிக்கும் ராணுவத்திற்கும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட இஃவானுல் முஸ்லிமீனுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை நெருங்குவதை இச்சம்பவம் எடுத்தியம்புகிறது.
முபாரக் பதவி விலகிய பிறகு ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் மக்கள் விரும்புவோரிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என கோரி கெய்ரோவில் தற்பொழுதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment