பக்கங்கள்

Sunday, April 8, 2012

ஆறு உய்கூர் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று சீன அரசு அறிவிப்பு


Uighur muslims
பீஜிங்:ஜிஞ்சியாங் மாகாணத்தில் அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு தலைமை வகித்தார்கள் என்று சுட்டிக்காட்டி ஆறு முஸ்லிம்களை சீன கம்யூனிச சர்வாதிகார அரசு தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளது. அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ஈஸ்ட்  துருக்மெனிஸ்தான் இஸ்லாமிக் மூவ்மெண்ட் என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும், ஏராளமான தாக்குதல் வழக்குகளில் இவர்கள் சார்ந்த அமைப்பிற்கு தொடர்பிருப்பதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அமைப்பு ஈஸ்ட் துருக்மெனிஸ்தான் இஸ்லாமிக் மூவ்மெண்ட் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
ஜிஞ்சியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை கையாண்டு வரும் சீன கம்யூனிச சர்வாதிகார அரசு பொய்யான வழக்குகளின் பெயரால் அப்பாவி முஸ்லிம்களை வேட்டையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment